15 November 2015

இரு முகம்..!


தவறான வழிகாட்டல்களின் அடிப்படையில் நியாயமான போராட்டங்கள் பல தடம் புரண்டு நிற்கின்றன. போராட்டங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன என்பதை மறந்து அதன் மூலம் கிடைக்கும் அற்ப லாபங்கள், மேலாதிக்கம், இன்னொருவனை அடக்கியாளும் போதை போன்றன பலரை கட்டிப் போட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் நியாயங்களை நிரூபிக்கும் காரணங்களை சட்டைப் பையினுள் வைத்துக் கொண்டு அலைகின்றனர். ஊரில் ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்தவனை பிடித்து கையில் ஆயுதங்களை கொடுத்து அடுத்தவனை அடக்கும் பொறுப்பைக் கொடுத்தால், ஈற்றில் அதுவே போதை இன்பமாக மாறுகின்றது. ஏண்டா கொன்றாய் என்று கேட்டால் காரணமே இருக்காது அவனிடம். இது அடிமட்ட போராளியின் கதை என்றால், உயர் மட்ட வழிகாட்டி; தன்னை சுற்றி நூற்றுக்கணக்கான பாதுகாவளர்கள், ஏதோ மில்லியன்களின் புரண்டவன் பல பில்லின்களுக்கு அதிபதி. எவன்தான் விரும்பமாட்டான். பல போராட்டங்களுக்கு நியாமான தீர்வு வழங்க பொறுப்பான தரப்புகள் முன் வந்தும் இன்றுவரை அவை நிறைவுறாமல் இருப்பதற்கு இவைகள் பிரதான காரணங்கள்.

யுத்த களங்களில் பச்சை மரங்களைக் கூட வெட்டக் கூடாது என்று போதிக்கும் இஸ்லாத்தின் பேரால் "ஜிஹாத்" புரிகின்றோம் என்று சொல்லிக் கொண்டு பச்சிளங்குழந்தைகளை கொன்று குவிக்கும் நாசகாரக் கும்பலுக்கும் ஆதரவு கொடுக்கும் உண்மை அறியாத சிலர் எம்மில் இன்னும் இருக்கின்றனர். பாரிஸில் தாக்குதல் என்றுவுடன் "நல்லம்தானே" என்று சொல்லும் இஸ்லாமியர்களையும் எமது காது வழியே கேட்டிருப்போம். திட்டமிடப்படாத தவறான புரிதல்கள் என்பதைவிட வேறொன்றும் சொல்ல முடியாது. அன்றாடம் நாம் பழகும் மாற்று மத சகோதரனுக்கு அநீதி இழைக்கப்படுவதை கண்டு நம்மில் எவரும் கைகொட்டி சிரிக்கப் போவதில்லை.

ஆகுமான குர்பான் கொடுக்கப்படும் தருணத்தில் பிராணி அறுக்கப் பயன்படும் கத்தியைக் கூட அந்த பிராணியின் முன்னால் வைத்து கூர்மைப் படுத்தாதீர்கள் என்று போதிக்கின்றது இஸ்லாம். இவ்வாறு இருக்கையில், ஒருவன் கழுத்தை அறுக்கும் காட்சியை பதிவு செய்து Youtube பதிவேற்றி ஹிட் கொடுப்பவர்களா புனிதப் போராளிகள்?



மத்திய கிழக்கில் நடக்கும் கூட்டுச்சதி மேற்குலக நாடுகளின் கபட நாடகங்கள் எல்லாம் ஒரு புறம் இருக்க நேற்றைய பாரிஸ் நகர தாக்குதல் மனித நேயம் உள்ள ஒவ்வொருவனும் கண்டிக்கவேண்டிய விடயம்.

முஸ்லிம் சகோதரர்கள் உட்பட பலர் தங்கள் எதிர்ப்புகளை பிரான்ஸ் கொடி கொண்ட Profile Pictures மூலம் காட்டி வருகின்றனர். ஒரு மனித நேய வாதியாக உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. இதற்கு மேலாக ஒரு கேள்வியை உங்கள் மனங்களிடம் கேட்டுப் பாருங்கள்; காஸா தாக்குதல், சிரிய சீரழிவுகள், மியன்மார் இனச்சுத்திகரிப்பு, ஈராக், லெபனான் எத்தனையோ முஸ்லிம் நாடுகள் இதைவிட மோசமான தாக்குதல்களுக்கு ஆளாகி இருக்கின்றன, ஆளாகின்றன. இதே சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருந்தன? சரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹஜ் நெரிசலில் சிக்கி எழு நூறுக்கு மோற்பட்டவர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதற்கு துக்கம் அனுஷ்டிப்பதற்கு சிறு முயற்சியை கூட மேற்கொள்ளவில்லை இந்த சமூக வலைத்தளங்கள். இவைகள்தான் இந்த விபச்சார ஊடகங்களின் இரட்டை முகம். இஸ்லாமியர்கள் எத்தனை பேர் மாண்டாளும் பொருட்டில்லை.

நீங்கள் தரவேற்றும் ஒவ்வொரு Profile Picture உம் தீவிரவாதத்திற்கு எதிராக அல்லாமல் இஸ்லாத்திற்கு எதிரானதாகவே நூற்றுக்கு எழுபது வீதமானவர்களால் பார்க்கப்படுகின்றது. உங்களது ஒவ்வொரு படமும் இன்னும் பல ஆயிரக்கணக்கான எமது இஸ்லாமிய உறவுகளை கொண்றொழிப்பதற்கான வேகத்தையும் உந்து சக்தியையும் வழங்கும் என்பதில் ஒரு துளி கூட ஐயமில்லை. ‪#‎ParisAttack‬ ‪#‎Pray4Paris‬

"...if any one slew a person - unless it be for murder or for spreading mischief in the land - it would be as if he slew the whole people: and if any one saved a life, it would be as if he saved the life of the whole people..." [Quran 5:32]

20 June 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை

நேற்றும் இன்றும் கிறிக்கற் வட்டாரத்தில் பரவலாகவும் ஆச்சரியத்துடனும் பேசப்படும் ஒரு விடயம்தான் MICHE HUSSEY இன் உடைய கருத்து; அதுதான் தான் ஏதாவது ஒரு வகைப்போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார் வர்ணணையாளர்களாலும் விமர்சகர்களாலும் Mr Cricket என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.
ஏற்கனவே சைமன்ஸ்ஸை இழந்திருக்கும் அவுஸ்திரேலியா அணிக்கு Mr Cricket ன் உடைய இழப்பு மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும். ஆஷஷ் ற்காக தயாராகி வரும் அவுஸ்திரேலிய பேரிடி விழுந்த செய்தியாக இந்த செய்தி அமைந்திருந்தாலும் ஆஷஷ் இன் பின்னேதான் ஓய்வு நடக்கும் என்பது ஒரு தெம்பாக இருக்கும். எவ்வாறயினும் ஹசியின் உடைய சகோதரர் அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு நம்பிக்கை தருகிறார்.
எவ்வாறாக இருந்தாலும் ஹசி T20 போட்டிகளை விட்டே விலகிக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. T20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஹசியின் ஓய்வு அவுஸ்திரேலியாவையும் அவுஸ்திரேலிய ரசிகர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தி இருந்தாலும் ஏனைய நாட்டு கிறிக்கற் ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான் செய்தியாகவே இருக்கும்.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கற் எதிர்காலம் மிக மோசமாகிக்கொண்டு வரும் வேளையில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கற் எதிர்காலம் பற்றி ஒரு தனிப்பதிவு(மிக சுவாரஷ்யமாக) இடலாம் என் எண்ணி இருக்கிறேன். தொடர்ந்து எதிர் பாருங்கள்.