20 June 2009

ஆச்சரியம் ஆனால் உண்மை

நேற்றும் இன்றும் கிறிக்கற் வட்டாரத்தில் பரவலாகவும் ஆச்சரியத்துடனும் பேசப்படும் ஒரு விடயம்தான் MICHE HUSSEY இன் உடைய கருத்து; அதுதான் தான் ஏதாவது ஒரு வகைப்போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார் வர்ணணையாளர்களாலும் விமர்சகர்களாலும் Mr Cricket என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.
ஏற்கனவே சைமன்ஸ்ஸை இழந்திருக்கும் அவுஸ்திரேலியா அணிக்கு Mr Cricket ன் உடைய இழப்பு மிகப்பெரிய இழப்பாகவே இருக்கும். ஆஷஷ் ற்காக தயாராகி வரும் அவுஸ்திரேலிய பேரிடி விழுந்த செய்தியாக இந்த செய்தி அமைந்திருந்தாலும் ஆஷஷ் இன் பின்னேதான் ஓய்வு நடக்கும் என்பது ஒரு தெம்பாக இருக்கும். எவ்வாறயினும் ஹசியின் உடைய சகோதரர் அவுஸ்திரேலியாவுக்கு ஓரளவு நம்பிக்கை தருகிறார்.
எவ்வாறாக இருந்தாலும் ஹசி T20 போட்டிகளை விட்டே விலகிக் கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. T20 உலகக்கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டிருக்கும் பரிதாப நிலமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஹசியின் ஓய்வு அவுஸ்திரேலியாவையும் அவுஸ்திரேலிய ரசிகர்களையும் பெரும் கவலையில் ஆழ்த்தி இருந்தாலும் ஏனைய நாட்டு கிறிக்கற் ரசிகர்களுக்கு மிகவும் இனிப்பான் செய்தியாகவே இருக்கும்.
அவுஸ்திரேலியாவின் கிரிக்கற் எதிர்காலம் மிக மோசமாகிக்கொண்டு வரும் வேளையில் அவுஸ்திரேலியாவின் கிரிக்கற் எதிர்காலம் பற்றி ஒரு தனிப்பதிவு(மிக சுவாரஷ்யமாக) இடலாம் என் எண்ணி இருக்கிறேன். தொடர்ந்து எதிர் பாருங்கள்.

16 June 2009

இலங்கை பாவம் சி துரதிஸ்டம் சி அதிஷ்டம் என்ன சொல்வது.......

இம்முறை T20 world cup சுப்பர்8 சுற்றில் இலங்கை அணிக்கு எந்த அணிக்கும் நடக்காத ஒரு துரதிஸ்டம்(சொல்லலாமா தெரியாது) காத்திருந்தது. அதுதான் இலங்கை super8 ல் மூன்று போட்டிகளிளும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு உள்ளாகி இருந்தது.
முதல் போட்டியில் இலங்கையுடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியே இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுளைந்தது.அதே போன்றுதான் Group-Eல் தென்னாபிரிக்காவும் மேற்கிந்தியதீவுகளும்.
காரணம் இலங்கயின் மோசமான நிகர ஓட்ட சராசரியே. அயர்லாந்துடன் காட்டிய மிக மோசமான பெறுபேறுகளே இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். அயர்லாந்துடன் மயிரிழையில் தப்பியது இலங்கை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் எவ்வாறோ இலங்கை மூன்று போட்டிகளிளும் வெற்றி பெற்றுவிட்டது.
ஒருவாறு அரை இறுதிக்குள் நுளைந்து விட்டோம் என்றால் அங்கும் பரிதாபம், மேற்கிந்தியாவின் Bravo,Flucture,Gayle,Simmons யை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலமை(அனேகமாக), (India Vs S.Africa போட்டி இன்னும் முடியவில்லை).முன்பொருமுறை சந்திதிருந்தாலும் தற்பொழுது இந்தியாவையும் இங்கிலாந்தயும் வீட்டுக்கு அனுப்பிய வேட்கையுடன் இருக்கிறது. மயிரிழையில் தப்புகின்ற வேலை எல்லாம் சரிவராது.

முதல் பதிவு

இன்று முதல்
எனது பெயர் முஹம்மது அஜுவத். நான் இலங்கையின் அக்கரைப்பற்றைச் சேர்ந்தவன். எனது வலைப்பதிவினை இன்று முதல் நான் தொடங்கி இருக்கின்றேன். என்னால் முடிந்தளவு பிரயோசனமான பதிவுகளை இடலாம்(நேரம் கிடைக்கும் போது) என எண்ணி இருக்கின்றேன். உங்களது ஆதரவுதான் என் போன்ற பதிவாளர்களை ஊக்குவிக்கின்றது. நிச்சயம் உங்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும் என நினைக்கின்றேன்.
தொடர்ந்து பதிவுகளை படியுங்கள் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்
உங்கள் தோழன் அஜுவத்.